அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர்கள் குளோட் மரினோ மற்றும் டிலூசன் பியூ மால் ஆகியோர் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அமலமரித்தியாகிகள் சபை அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ லோயிஸ் அலோண்சா அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையர்களின், உறவினர்கள் இறைமக்கள் என பலரும் கலந்து செபித்தனர்.



