அருட்பணி.மேரிபஸ்ரியன் அடிகளின் 40 வது ஆண்டு நினைவாக

CHURCH NEWS DIOCESE

மக்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த முன்னை நாள் வங்காலை பங்குத்தந்தை அமரர் மேரி பஸ்டியான் அடிகளார் அவர்களது 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இரங்கல் திருப்பலியும் நினைவுகூறல் நிகழ்வும் கடந்த 06.01.2024 திங்கள் அன்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், அதனை தொடர்ந்து வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தந்தை கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும், வங்காலை மண்ணில் கடமையாற்றிய மற்றும் வங்காலை மண்ணைச் சேர்ந்த குருக்கள் துறவிகளும் இறைமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து அஞ்சலிகளை செலுத்தினார்கள். முடிவில் அமரர் மேரி பஸ்டியான் நினைவாக இரத்ததான முகாமும் இடம் பெற்றது.

அமரர் மேரி பஸ்டியானின் வாழ்க்கை விடயங்கள் சில….

இறையரசின் தனது ஆன்மிக வாழ்வுப்பணியுடன் தன்னித்தின் அவலத்தை கண்டு துயர்துடைத்த தேவதூதனே எங்கள் மேரிபஸ்ரியன் அடிகள். நான்கு தசாப்தங்களுக்கு முன்பான காலப்பகுதி. வங்காலை பங்கின் தந்தை தனது ஆன்மிக பணியுடன் சமூக மறுமலர்ச்சியையும் மக்களிடத்தில் வளர்க்க துடித்த சுறுசுறுப்பான இளம்குரு. அன்பே உருவான அழகிய மனிதம் இறையன்பை அவரிடம் கண்டோம். மலையகத்தில் இருந்து தமிழ்மக்கள் சிங்களவரால் வெளியேற்றப்பட்டபோது அவர்களுக்கான வாழ்விடங்கள் அமைத்து கொடுத்து வாழ்வதற்கு ஆறுதல் அளித்தார்.

04.12.1984 மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா அரச படையினால் முருங்கன் மன்னார் பிரதான வீதிபில் கொல்லப்பட்ட 150 க்கு மேற்பட்ட மக்களுக்காக துடியாய் துடித்தார். மக்களுக்காக இராணுவத்திடம் தட்டிக்கேட்டார். இறந்த மக்களின் உடல்களை அடக்கம் செய்ய அந்த மக்களின் உறவினர்களுக்கு உதவினார். நடந்துமுடிந்த அப்பட்டமான இனப்படுகொலையை உலகறியச்செய்ய மனித உரிமை மனித நேயத்தை வேண்டிநின்றார். நடந்து முடிந்த ஒரு மாதம் கடந்த இரண்டாம் நாளில் 06.01.1985 நள்ளிரவு அவரை இலக்காக கொண்டு வங்காலை கிராமம் சிறிலங்காபடையினால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தப்படுகொலைக்கு சிறிலங்கா அரசு எந்தப்பொறுப்புக்கூறலையும் இதுவரை வழங்கவில்லை. நடத்து முடிந்த உண்மையின் சாட்சியங்களாக வங்காலைப்பங்கு மக்கள் வருடம் தோறும் நினைவுகொள்கின்றனர். இவரது இழப்பின் பெறுமானத்தை மனித உரிமைக்குரலாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபைக்கு எடுத்துச்செல்வது அனைவரதும் காலத்தை எட்டிய பொறுப்பாகும்.

Image 1

Image 2

Image 4

Image 5

Image 6

Image 7

Image 8

Image 9

Image 10

Image 10

Image 10

Image 10