இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயப் பாலர் பாடசாலையின் ஒளி விழா

CHURCH NEWS DIOCESE
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயப் பாலர் பாடசாலையின் கிறிஸ்து பிறப்பு ஒளி விழா நிகழ்வுகள் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரும் சிறப்பு விருந்தினராக வவுனியா லொயாலா பல்கலைக்கழகத்தின் அதிபரும் இயக்குநருமான அருட்தந்தை எமில் அடிகளாரும் மற்றும் இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளார்,அருட்தந்தை இயேசுராஜா அடிகளார்,உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல் ரோய் அடிகளார்,ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் உப அதிபர் அருட்தந்தை அலஸ் அன்ரனி அடிகளார் மற்றும் திருக்குடும்ப கன்னியர் இல்ல அருட்சகோதரிகள் எனப் பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *