இளைஞர்களின் திறமையூம் படைப்பாற்றலும் நமக்குத் தேவை” திருத்தந்தை பிரான்சிஸ்

Vatican வத்திக்கான்

“இளைஞர்களின் திறமையும் படைப்பாற்றலும் நமக்குத் தேவை” திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 23 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கிறிஸ்துமஸ் போட்டி – 2024 இல் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 80 பேரைச் சந்தித்தபோது “ உலகிற்கு உண்மையான அமைதியைக் கொண்டுவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று நமக்கு தேவை என்றும் பலநூற்றாண்டுகளாக உலகில் உடன்பிறந்த உறவின் பாதைகளை ஒவ்வொரு மொழி மற்றும் கலாச்சாரத்தின் துணைகொண்டு எண்ணற்ற கலைஞர்களை கிறிஸ்துமஸ் போட்டி ஊக்கப்படுத்தியுள்ளது” என்று கூறியதோடு இப்போட்டியின் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
கிறிஸ்துமஸ் போட்டி 2024 என்னும் மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக உண்மைத்தன்மையாக பங்கேற்பாளர்கள் அனைவரும் இருக்கின்றார்கள் என்றும் அவர்களின் கதைகள் மற்றும் குரல்களின் வழியாக கடவுளின் அன்பு இயேசு கிறிஸ்துவில் மனிதனாக உருவாக்கப்பட்டு எப்போதும் மனித இதயங்களுக்குள் பேசுகிறது என்றும் எடுத்துரைத்தார். தங்களது கலைத்திறமையின் வழியாக மனித மற்றும் கிறிஸ்தவ பயணத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களின் பணியானது வெவ்வேறு வழிகளில் வார்த்தை மனு உருவான அன்பின் மறைபொருளை பாடல் மற்றும் இசையின் வழியாக வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்ற வானதூதரின் புகழ்ப்பாடலை எடுத்துரைத்த திருத்தந்தைஅவர்கள் துன்பம் ,நோய்,போர்,கட்டாய இடம்பெயர்வு குடும்பம்,பள்ளிஅல்லது நண்பர்களுடன் பிரச்சினைகள் போன்ற பல காரணங்களுக்காகநம்பிக்கையை இழந்த உடன்வாழும் சகோதர சகோதரிகள் பற்றி பாடல் மற்றும் இசையில் எடுத்துரைப்பதற்கு நன்றி தெரிவித்தார். இளைஞர்களின் திறமையும்படைப்பாற்றலும் நமக்குத் தேவை அவர்கள் பணம் அல்லது வெற்றியின் சிலைகளால் அல்ல மாறாக அழகு உடன்பிறந்த உறவுநம்வாழ்க்கையைக்காப்பாற்றி அதற்கு அர்த்தத்தைத் தரும் இயேசுவுக்காக தூண்டப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *