நேர்மை, தூய்மை, அன்பு என்னும் விண்ணுலக செல்வங்களைக் கொண்ட திருக்குடும்பத்திலே ஏழை வடிவெடுத்து மாட்டுத் தொழுவத்திலே மனுக்குலத்தை மீட்க இயேசு பாலன் பிறந்தார். பாலன் பிறந்த செய்தி ஏழை இடையர்களுக்கே முதலில் அறிவிக்கப்பட்டது. எளியவர்களுடனான அவரின் வாழ்வின் பிணைப்புக்கு அது ஒரு முன் அடையாளம் ஏழ்மையை அன்பு செய்து வாழ்ந்தவர் இயேசு.
தாம் வாழ்ந்த காலத்தில் இயேசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்த போதிலும் யூதகுலம் உலகின் மெசியாவை ஏற்க மறுத்தது. ஏழை எளியவர்களை இயேசு அன்பு செய்து அவர்களுக்காகப் பரிந்து பேசி வாழ்ந்தது அதற்கு ஒரு காரணம் இன்றும் நாம் எம் அயலவர்கள் ஏழையாகவோ படிப்பறிவு குறைந்தவர்களாகவோ இருந்தால் அவர்களை ஏற்று வாழ மறுக்கிறோம். சிறியவர்களில் கூட வேறுபாடு காட்டுகிறோம். பணம் படைத்தவர்களை ஏற்று வாழ்கிறோம்.
கிறிஸ்தவர்களாகிய எமது வாழ்வு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகவே அமைய வேண்டும். எமக்காக மானிட உரு எடுத்து எளிமையாய் வாழ்ந்து முன்மாதிரிகை காட்டிய இயேசுவின் வழியிலே எமது வாழ்வு அமைய வேண்டும். எமது மனதில் வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை என்பவை குடிகொள்ளுமானால் எமது மனம் இறைவனுக்கு உகந்ததாக மாற முடியாது. உலகில் நல்மனத்தோர்க்கு அவர் கொண்டு வந்த சமாதானம் நம்மைச் சேர முடியாது.
வீண் ஆடம்பரங்கள் கிறிஸ்மஸ் அல்ல. வீட்டுக்குள் அலங்கரித்து விருந்துகள் வைத்து போட்டி போட்டு புத்தாடை புனைவதால் கிறிஸ்மஸ் அர்த்தம் பெறாது. அவரின் சாட்சியாய் நாம் வாழ வேண்டும். ஆடம்பரங்களுக்காக அநாவசியமாகச் செலவிடும் பணத்தை ஏழை எளியவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது இயேசுவை நாம் பின்பற்றுகின்றோம் பிரதிபலிக்கின்றோம். தூய்மையான அன்போடும்,தாழ்ச்சியோடும், பகிர்வோடும் ஏழ்மையில் பிறந்த இயேசுவின் பிறப்பை நாம் கொண்டாட வேண்டும்.
“எளிய மனத்தோர் பேறு பெற்றோர்” என்ற இயேசுவின் வார்த்தைப்படி எளிய மனத்தோராய் வாழுவோம் பாலன் பிறந்த போது தேவாதி தேவனாக அவரைச் சூழ இருந்த எளிமையான சூழலை நினைவில் கொள்ளுவோம். எளிய மனத்தோடு இயேசு பாலனை வரவேற்போம். அப்போது நம் உள்ளங்களில் பாலன் பிறப்பார். எம்மில் செயல்படுவார். எளியோரை அன்பு செய்வோம் உலகத்தில். இயேசுபாலனை பிறக்க வைப்போம் உள்ளத்தில்.

ஆக்கம் : டேவிற் ஜெறோம் ஜதுசன்
மன். முருங்கன் மத்திய கல்லூரி.