கட்டைக்காடு பங்கின் பங்குதந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளாரின் தலைமையில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலய இறைமக்களின் முழுமையானஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு இரவுக்கதையாக “என்றிக்கு எம்பரதோர் நாடகம்” கடந்த புரட்டாதிமாதம் 04,05ஆம் தேதிகளில் கட்டைக்காடு கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதலாம் நாள் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் இரண்டாம் நாள் பிரதம விருந்தினராக அருட்பணிவிக்ரர் சோசை அடிகளாரும் (இயக்குநர் கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு மன்னார் மறைமாவட்டம்) கலந்து கொண்டதுடன் இன்னும் பல சிறப்பு விருந்தினர்களும்ரூபவ் கௌரவ விருந்தினர்களும் கலந்து கொண்டனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் கட்டைக்காடு பங்குதந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளார் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

