கனகராயன்குளம் பங்கின் ஞானொடுக்கம்

CHURCH NEWS DIOCESE
கடந்த 14.09.2024 தொடக்கம் 28.09.2024 வரை “எழுந்திடு… கடவுளிடம் திரும்பி வா…” என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு செப ஆண்டை முன்னிட்டு செபத்தில் மக்களை அதிகமாக ஆர்வப்படுத்தி ஆழமாக்கிட ஞானொடுக்கமானது மிகவும் சிறப்பான முறையில் வவுனியா கனகராயன்குளம் பங்குத்தந்தை அருட்பணி அனுசியல் (அ.ம.தி) அடிகளாரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஞானொடுக்கமானது கனகராயன்குளம் பங்கின் பாதுகாவலர் புனித அந்தோனியாரின் ஆசீருடனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இவ் ஞானொடுக்கத்தை அமல மரித்தியாகிகளின் அருட்சகோதரர்களும்,அருட்தந்தையர்களும் மன்னார் மறைமாவட்டத்தின் அன்பிய ஆணைக்குழுவின் வளவாளார்களும் இணைந்து மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்கள்.
மாறா இலுப்பை வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கனகராயன்குளம் புனித அந்தோனியார் ஆலயம், கல்மடு புனித சவேரியார் ஆலயம், நெடுங்கேணி கிறிஸ்து அரசர் ஆலயம் மற்றும் பட்டடை பிரிந்தகுளம்,பெரியகுளம் புனித யூஜின் டி மசனட் ஆலயம், மதியாமடு மருதமடு அன்னை ஆலயம் ஆகிய ஆலயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் இல்லங்கள் தரிசிக்கப்பட்டு, சிறுவர்கள்,பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், மறையாசிரியர்கள், அன்பிய ஊக்குவிப்பாளர்கள், ஆலய சபையினர், பங்குச் சபையினர் மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் அனைவருக்குமான கருத்தமர்வுகள், நற்கருணை எழுந்தேற்றம், அன்பிய வழிபாடுகள், குடும்பப் புத்தகம் பதிவிடல், ஒப்புரவு திருவருட்சாதனம் வழங்குதல்,குணமாக்கல் வழிபாடு, செபமாலைப் பேரணி,நோயாளர்களின் வீடுகள் சந்தித்து நற்கருணை வழங்குதல்,திருவருட்சாதனங்கள் (திருமுழுக்கு,முதல் நன்மை, உறுதிப் பூசுதல் மற்றும் கைப்பிடித்தல்) வழங்குதல், திருப்பலி ஒப்புக்பொடுத்தல், போன்ற ஆன்மீகச் செயற்பாடுகள் இடம்பெற்றன.
ஞானொடுக்கத்தின் நிறைவாக 27.09.2024 மாலை கலை நிகழ்வுகளும் 28.09.2024 சனிக்கிழமையன்று நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் புனிதரின் கொடியும் இறக்கப்பட்டது. இவ் ஞானொடுக்கத்தின் மூலமாக பங்கு இறைவனின் நிறையாசீரை பெற்றது மட்டுமன்றி கடவுளைவிட்டு வெகு தொலைவில் சென்றவர்கள் தன்நிலையுணர்ந்து இறைவனை இறுகப்பற்றிக்கொள்ள ஓர் அருமையான சந்தர்ப்பமாகவும் காலமாகவும் இது அமைந்ததையிட்டு இறைவனுக்கும் இதனை நெறிப்படுத்திய பங்குத்தந்தை,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள் வளவாளார்கள் அனைவருக்கும் பங்குமக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
Image 1
Image 2
Image 3
Image 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *