கடந்த 19.10.2024 சனிக்கிழமையன்று காலை 11.00 மணிக்கு “கலையருவி கவின் கலை பயிலகம்” நடாத்தும் ஓர்கன், நடனம், வயலின், மிருதங்கம் மற்றும் கிற்றார் ஆகிய வகுப்புக்கள் கலையருவியின் இயக்குநர் அருட்பணி. லக்ஸ்ரன் டி சில்வா அடிகளாரின் தலைமையில் கலையருவி மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது 80 இற்கும் அதிகமான மாணவர்களும் சில மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஏற்கனவே வகுப்புகளுக்கு ஒழுங்காக 2019-2020 வரை வருகைதந்த மாணவர்களுக்கான அரங்க ஆற்றுகை சான்றிதழ் பரீட்சை என்பன வருகின்ற டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலும் அவர்களுக்கான சான்றிதழ் கலையருவியின் ஏற்பாட்டில் நடைபெறும் மன்னார் மறைமாவட்ட கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்ட நிகழ்வின் போதும் வழங்கப்படும்.




