மீண்டும் ஒரு கிறிஸ்மஸ் விழாவை நாம் கொண்டாட இருக்கின்றோம். இந்த மாதம் முழுவதும் ஒளி விழாக்களும், ஏனைய கிறிஸ்மஸ் விழாவை ஒட்டிய போட்டிகளும், ஏனைய ஆன்மீக ஆயத்தங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இன்னும் ஒரு புறத்தில் வருடா வருடம் மன்னார் நகரில் இடம்பெறும் நத்தார் வியாபாரக் கடைகள் தொடங்க உள்ளது. இவ்வாறான அனைத்து நிகழ்வுகளும் எமக்கு டிசம்பர் மாதத்தை கிறிஸ்மஸ் மாதம் என்று எடுத்தியம்பி நிற்கின்றது.ஆனால் கிறிஸ்மஸ் என்பது இவை அனைத்தையும் கடந்து கடவுள் எம்மைப் போன்று மனிதனாக மாறிய உன்னதமான நிகழ்வைக் கூறி நிற்கின்றது. அதுவும் இருளில் இருந்த மக்களுக்கு ஒளி கொடுக்க, அநீதி நிறைந்த உலகில் நீதியை நிலை நாட்ட,பொய்மையில் வாழ்ந்த மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க கிறிஸ்து மனித அவதாரம் எடுத்தார். அடுத்த வருடம் உலகம் முழுவதும் இயேசுவின் மனித அவதாரத்தின் 2025 வருட நிறைவை யூபிலி விழாவாகக் கொண்டாட அனைத்து ஆயத்தங்களும் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் இயேசுவின் இவ்வருட பிறப்பு விழாவானது எம்மையும், எம் நாட்டுத் தலைவர்களையும் அனைத்து மக்களையும் ஒளியால் நிரப்பட்டும். இழந்த உரிமைகள் கிடைக்கப்பெற அன்றாட கஸ்ரங்கள் நீக்கப்பட இயற்கை அனர்த்தங்களிலிருந்து காக்கப்பட பிறக்க இருக்கின்ற பாலகன் இயேசு அருள் கூர்வாராக.இருளில் நடந்து வந்த மக்களுக்கு நம்பிக்கை என்னும் ஒளி கொடுத்த அதே பாலகன் இயேசு உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் நம்பிக்கை கொண்ட 2025 என்னும் புதிய வருடத்தையும் தருவாராக. உங்கள் அனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அருட்பணி பி. கிறிஸ்துநாயகம்
குருமுதல்வர்
மன்னார் மறைமாவட்டம்.
குருமுதல்வர்
மன்னார் மறைமாவட்டம்.

