கூமாங்குளம் முன்பள்ளியில் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை வேப்பங்குளம் பங்குதந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சூப்பர் ஸ்டார் பௌண்டேசன்ஸ் கலந்து கொண்டதுடன் மேலும் பல விருந்தினர்களும் மற்றும் அருட்சகோதரிகள்,பிள்ளைகளின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்





