இலங்கை மறைமாவட்டங்களின் சமூகத் தொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களின் தேசிய ஆணைக்குழுக் கூட்டமானது 17.10.2024 வியாழக்கிழமையன்று காலை நடைபெறவிருந்ததை முன்னிட்டு 16.10.2024 புதன்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணம் சமூகத் தொடர்பு ஆணைக்குழுவும் குருநகர் பங்குச் சமூகமும் இணைந்து உணர்வூ பூர்வமான கலை நிகழ்வினை ஒழுங்குபடுத்தி இருந்தது.
இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரும் இலங்கை ஆயர் மன்றத்தின் சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் தலைவருமான மேதகு மெக்ஸ்வல் சில்வா ஆண்டகை அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் தேசிய இயக்குநர் அருட்பணி. யூட் கிறிஷாந்த அடிகளாரும் ஏனைய மறைமாவட்டங்களின் இயக்குநர்களும்இ குருநகர் பங்குத்தந்தை அருட்பணி. யாவிஸ் அடிகளாரும்இ பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையிலும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதனை நெறிப்படுத்திய யாழ் மறைமாவட்ட இயக்குநர் அருட்பணி. ஸ்ரீபன் அடிகளார் மற்றும் குருநகர் பங்குத்தந்தை அருட்பணி. யாவிஸ் அடிகளார் ஆகியோரை மன்னா சமூகத்தினர் வாழ்த்தி பாராட்டுகின்றோம்