சிறப்பாக நடைபெற்று முடிந்த கலையருவியின் ஒளி விழா – 2024

CHURCH NEWS DIOCESE

கலையருவியின்- மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒளி விழா நிகழ்வானது கடந்த 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் கலையருவி கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் ,மன்னார்  மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மற்றும் முன்னைய நாள் குருமுதல்வர் அருட்பணி. விக்ரர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோகர்கள் , அருட் சகோதரிகள், மற்றும் மன்னா பத்திரிகை, மன்னார் கத்தோலிக்க அச்சகம், மன்னார் கத்தோலிக்க ஊடகம், கலையருவி கவின்கலை பயிலகம், கலையருவி கலைஞர் மன்றம் ஆகிய பிரிவுகளின் பணியாளர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் .

இந் நிகழ்வின் போது மன்னார் மறைமாவட்டத்தின் அதிகார பூர்வ இணையத் தளமாகிய manna.lk மன்னார் மறைமாவட்ட ஆயர் தந்தை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான நிதி உதவியினை மனமுவந்து அன்பளிப்பு செய்த லண்டனைச் சேர்ந்த திரு. குணம் அங்கிள், திரு. சசி அண்ணா, திரு. டக்ளஸ் தம்பி ஆகியோருக்கு மறைமாவட்டம் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம். இணையதளத்தை உருவாக்க முழுமையாக உழைத்த திரு. கிஷான் கோமஸ் – கலையருவி IT ஆலோசகர் மற்றும் அவரது பணியாளர்கள் திரு. யான், திரு. எமர்சன் ஆகியோருக்கும் மறைமாவட்டம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.

இதனை சிறப்பாக வழிப்படுத்தி, நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடித்த கலையருவி இயக்குனர் அருட்பணி லக்‌ஸ்டன் டி சில்வா அடிகளார் அவர்களுக்கும், அவருடன் இணைந்து செயல்பட்ட அவரது பணியாளயர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் செபங்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

Image 1

Image 2

Image 4

Image 5

Image 6

Image 7

Image 8

Image 9

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10

Image 10