முருங்கன் பங்கு சுண்டிக்குளி கிராமத்தின் கத்தர் ஆலய மக்களின் “புனித அந்தோனியார் வாசகப்பா கடந்த 03.09.2024 செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் முருங்கன் பங்குதந்தை அருட்பணி. இராஜநாயகம் அடிகளார் உதவி பங்குதந்தை அருட்பணி பி.றஜீவன் லியோன் அடிகளாரினதும் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

