டிலாசால் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரரின் நித்திய அர்ப்பணம்

CHURCH NEWS DIOCESE
டிலாசால் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் கைத்தான் ஜெராட் மத்தியூஸ் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மன்னார் டிலாசால் இல்லத்தின் சிற்றாலயத்தில் தனது நித்திய அர்ப்பணத்தை செய்துள்ளார். இந் நித்திய வாக்குத்தத்த திருநிகழ்வு திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்துநாயகம் அடிகளாரினால் நிறைவேற்றப்பட்டது. இந் நிகழ்வினை டிலாசால் துறவற சபையையின் தெற்காசிய கொழும்பு நிர்வாகப் பிரிவு ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறைபணிக்காக தன்னை அர்ப்பணித்து நித்திய அர்ப்பணத்தை மேற்கொண்ட அருட்சகோதரர் கைத்தான் ஜெராட் மத்தியூஸ் அவர்களுக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பாக மன்னா பத்திரிகை செபங்களோடு கூடிய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.