திருச்சிலுவை கன்னியர் சபைத்தலைவி இலங்கை விஜயம்.

CHURCH NEWS NATIONAL Universal Church

திருச்சிலுவைக் கன்னியர் சபை முதல்வர் அருட்சகோதரி டொறினா அவர்கள் தமது ஆலோசகர் மூவருடன் 02.10.2024 அன்று இலங்கைக்கு வருகை தந்தார். பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையும் தரிசித்தார். அந்த வேளையில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையும் தரிசித்தார். அத்தோடு மாத்தளையில் அமைந்துள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் நவசந்நியாச உருவாக்கல் பணித்தளத்திற்குச் சென்று உருவாக்கல் நிலையில் இருந்தவர்களுக்கும் நவசந்நியாசத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் இலங்கையின் திருச்சிலுவைக் கன்னியர் சபையின் மாகாணத் தலைவி மற்றும் ஆலோசகர் தெரிவிலும் பங்கு பற்றி இம்மாதம் 11ம் தேதி திங்கட்கிழமையன்று மீண்டும் தமது பணித்தளம் நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.