திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுக நல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 24ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுகநல நிலையப் பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்சாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தலைமை தாங்கி விழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் வைத்தியசாலைத் தாதியர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

