திருவுளச்சபையின் உலகளாவிய தலைவரான உயர் மதிப்பிற்குரிய அருட்பணி மார்க் ஆந்ரே லப்றம்யே அடிகளார் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் இம்மாதம் 02ம் தேதி வரை தனது உத்தியோகபூர்வ மேய்ப்புபணி விஜயத்தை இலங்கை உருவாக்க மாகாணத்திற்கும் கேரளா மற்றும் தமிழ்நாட்டு மாவட்டங்களுக்கும் மேற்கொண்டு திருவுளச்சபை குழுக்கள் மணத்துறவேற்ற ஆண்கள் மற்றும் பொதுநிலை இணை உறுப்பினர்களை சந்தித்து அவர்களை அவர்களுடைய வாழ்வு குறித்து தெரிந்து கொண்டார். அந்த வகையிலே கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் இம்மாதம் 2ம் தேதி வரை அவர் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பல மேய்ப்பு பணி நிகழ்வுகளில் பங்கேற்றார்.
அந்த வகையில் கண்டி திருவுள சபையின் மேற்குருமடத்திற்கும் மற்றுமாக யாழ்ப்பாண திருவுளச்சபையின் சிறிய குறுமடத்திற்கும் அத்தோடு யாழ்ப்பாணம்,மன்னார்,கொழும்பு ஆகிய மறை மாவட்டங்களில் வாழ்கின்ற திருவுளச்சபை இணை உறுப்பினர்களுடைய கூட்டங்களிலும் குழுக்களிலும் அவர் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடியதோடு இலங்கையிலே பதுளை மற்றும் கண்டி,யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் கொழும்பு ஆகிய மறை மாவட்டங்களிலும் ஆயர் தந்தையர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தொடர்ந்து திருவுளச் சபையின் பணி அவர்களுக்கு அவர்களுடைய மறை மாவட்டங்களிலே இருக்கும் என்று எடுத்துக் கூறியதோடு அவர்கள் செய்த நன்மை தனங்களுக்காகவூம் நன்றி கூறினார். அத்தோடு கடந்த மாதம் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து கேரள மற்றும் தமிழ்நாட்டு பிரதேசங்களிலே வாழுகின்ற குருக்கள் மற்றும் திருவுளச்சபை குருமட மாணவர்களையும் இணை உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கி மீண்டுமாக இரண்டாம் தேதி இலங்கையிலிருந்து கனடா தேசம் திரும்பி இருக்கிறார் அவருடைய இந்த வெற்றிகரமான மேய்ப்பு பணி விஜயத்திற்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு திருவுளச்சபை குழுக்கள் குருமட மாணவர்கள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர்களுடைய சபை முதல்வருடைய ஆசை அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

