தேவலோகம் தூய மிக்கேல் சம்மனசானவர் தனக்கே உரிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் காலடிகளில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் ஆவி கண்ணீரும் கம்பலையுமாக சம்மனசானவரிடம் எதையோ யாசிக்கின்றது.
சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் ஒரு வீதி விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தவள். இவள் பெயர் றாஜேஸ்வரி. பூலோகத்தில் அண்மையில் இடம்பெறப்போகிற தங்கை புவனேஸ்வரியின் திருமணத்துக்குத் தூதும் போக வேண்டும். இதுதான் அவரின் கோரிக்கை. “நீ அங்கே போனால் தாங்க முடியாத வேதனையுடன்தான் திரும்பி வருவாய். உனது நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்.” இது சம்மனசானவரின் கூற்று. றாஜேஸ் விடாப்பிடியாக நிற்கிறாள். எனது எதிர்பாராத இறப்பு அவர்களுக்கு பாரிய இழப்பு. எனவே நான் அங்கு சென்று எப்படி எப்படியெல்லாம் அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்து விடுவேன். சரி உன் இஸ்டம். சம்மனசானவர் அனுமதி கொடுத்து விடுகின்றார்.
றாஜேஸ் அளவில்லா ஆனந்தத்துடன் புறப்படுகிறாள்.

முதலில் தகப்பனை நாடுகிறாள். வரவேற்பறையில் அவருடைய நெருங்கிய நண்பனுடன் உரையாடிக்கொண்டிருக்கும் குரல் கேட்கிறது. “றாஜேசுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் கற்பனை கூடச் செய்யவில்லையே” இது நண்பனின் அனுபவம். “அவளால் தானே என் புவனாவுக்கு இத்தனை நாளாய் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கமுடியவில்லை. எனது குடும்பம் எவ்வளவு கௌரவமானது என்று உனக்குத் தெரியும். எனது வீட்டில் சம்மந்தம் எடுக்க எத்தனை பேர் போட்டி போட்டார்கள் இப்போது என் புவனாவுக்கு இந்த வாழ்க்கையை ஒழுங்கு செய்ய எவ்வளவு கஸ்டப்பட்டேன். செல்லா என்று அன்பாக அழைத்தவர்கள் இன்று சாதியின் பெயரால் கூப்பிட்டுச் சிரிக்கிறார்கள். கொம்பியூட்டர் படிக்கவென்று போனாள். ஒரு ஆறு மாதம்தான் யாரோ றாஜாவாம் அவனோடு போய்விட்டாள். போனவள் ஒரு நல்லசாதி பையனோட எண்டாலும் போயிருக்கலாமே.
முதன் முதலில் கடவுள் தந்த முத்து என்று பெருமைபாராட்டி மடியிலும் மார்பிலுமாகத் தாங்கி வளர்த்தேனே. எப்படி எல்லாத்தையும் மறந்தாள் இன்று நடக்கப்போகின்ற இந்தக்கலியாணம் எவ்வளவு ஆடம்பரமாக நடக்கவேண்டியது. ஏதோ ஒரு குறைபாடுள்ள பிள்ளையைக் கட்டிக்கொடுக்கிற மாதிரியல்லவா செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாம் அந்த ஒரு காலியால்தானே. அப்பாவுக்கு மகளின் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. “மனம் கொண்டதுதான் மாளிகை” இது அவருக்கு எங்கே புரியப்போகிறது.
றாஜியின் தீர்ப்பு இது.
“அதோ அண்ணா பந்தல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரே. மெல்ல நெருங்கி அவரின் பேச்சைக் கேட்போம்”. டே வர்ஷன் (இதுதான் அண்ணாவின் பெயர்). உனது வர்ணயாவின் தொடர்பு இப்போது எந்த அளவில் போய்க்கொண்டிருக்கிறது? “ச்சே” அத ஏன் மச்சான் கேக்குறாய். றாஜி தங்கச்சிதானே முதலில் எனது கலயாணம் நடக்கட்டும் என்று அவசரப்படுத்தியவர்கள்இ ““வர்ஷன்” “வர்ணயா” பெயர் கூட எப்படிப்பொருந்தியிருக்கிறது அப்பா கூறினார்” என்று ஆசைகாட்டினவள். இப்போது இந்த றாஜி செய்த வேலையால் இனிமேல் இந்தக் கலியாணம் நடக்குமென்று கனவில் கூட எதிர்பார்க்கக்கூடாது என்று அப்பா சொல்லிவிட்டார் என்று ஒரே வார்த்தையில் முடிவைச் சொல்லிவிட்டாள். வர்ணயாவிலும் பிழையில்லை. எங்கள் வீட்டில் இப்படி அசம்பாவிதம் நடந்திருக்கும்போது எந்த முகத்தோடு சம்மந்தம் கேட்க முடியூம். ஆனால் திருமணம் என்பது என் வாழ்க்கையில் இனி கேள்விக்குறிதான். இது அண்ணாவின் வேதனையூம் விரக்தியும் கலந்த வார்த்தைகள். தங்கை புவனாவூக்கு திருமணத்திற்கு என்று வாங்கிய நகைகளை மாட்டி அலங்காரம் செய்துகொண்டிருக்கிறார்கள் தோழிகள். றாஜி மெதுவாக அவர்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்புகிறாள். இத்தனையும் உனக்கு மட்டுமா புவனா? பொறாமையின் குரல் ஒன்று ஒலிக்கின்றது. ஆமாம் அத்தனையும் எனக்குத்தான். ஏன் இந்தப்பெரிய பங்களா கூட எனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்கா ஓடிப்போனதால் அதுவூம் ஒரு தரங்குறைந்தவனோடு ஓடிப்போனதால் எனது திருமணத்தை நிறைவேற்ற அப்பாவால் சீர்வரிசைகளைத்தான் அள்ளிக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுருங்கச் சொன்னால் அவள் ஓடிப்போனது எனக்கு வாசியாய் அமைந்து விட்டது. அதுவும் அவள் உயிரோடிருந்தால் சட்டப்படி எதையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். அவள்தான் இல்லையே. இதுதான் எனது ராசி. தம்பட்டமடிக்கிறாள் புவனா. கடவுளே இறப்பிலும் இனிமை காண்கின்றாளா? இரத்தம் கூட இவளுக்கு துடிக்கவில்லையா? விம்முகின்றாள் றாஜி.
சுரி அம்மாவின் மனநிலை எப்படி இரு;கின்றது என்று பார்ப்பபோம். தாயை அவள் அணுகுமுன்பு புவகுளம் அங்கு வந்துவிடுகின்றாள்.

“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா?” முடியாது எனவே அம்மாவின் மனதில் கொஞ்சமாவது தாய்மை உணர்வு இல்லாமலா போய்விடும். “அம்மா இந்தக் கல்அட்டியல் அக்காவின் கலியாணத்திற்கு என்றுதானே வாங்குனீர்கள்”. அம்மா ஆத்திரத்துடன் கத்துகிறாள். “சீ மூடு வாயை இந்த நல்ல நேரத்தில் அந்த தறுதலையின் பேச்சு எதற்கு. எனது குடும்பத்தில் என்னுடன் சேர்த்து ஆறு பேர் நகமும் சதையும் போல. ஒரு கூட்டுக்குடும்பம் போல வாழ்ந்து வந்தோம். ஆந்தச் சனியன் செய்த வேலையாலை எல்லாரும் என்னை ஒதுக்கிப்போட்டார்கள். ஏன் தாங்களுமே ஒரு தொடர்பும் இல்லாதபடி ஒதுங்கி கொண்டார்கள். அந்தக் கழுதைக்கு பாசம் உறவு அன்பு இதெல்லாம் எங்கே விளங்கப்போகிறது. தலையில் அடித்துக்கொண்டு அழுகின்றாள் அம்மா. புவனா அம்மாவைத் தேற்றிக் கொண்டிருக்கின்றாள்.
றாஜி சிந்திக்கிறாள். அப்பாவுக்கு கௌரவப்பிரச்சனை அண்ணாவுக்கு காதலின் பிரச்சனை அம்மாவுக்கு உறவு விரிசலால் வந்த பிரச்சினைஇ தங்கச்சி மட்டும் சொத்துசுகங்களால் கிடைத்து விட்ட மனநிறைவு. நான் அப்படி என்ன பெரிதாய் செய்துவிட்டேன். எனது மனதுக்கு விருப்பமானவருடன் வந்துவிட்டேன். அவ்வளவுதானே. இது இவ்வளவு பெரிய பூதாகாரமாக உருவெடுக்கும் என்று நான் நினைக்கவே இல்லையே.
ஏன் என் இதயம் கனிந்த ராஜா எப்படியெல்லாம் என்னை கண்மணிபோல பராமரித்து வருகின்றார். சுருக்கமாகச் சொல்லப்போனால் அப்பா அம்மாவூடன் இருந்ததைவிட இப்போது நல்ல மனநிறைவூடன்தானே இருக்கிறேன். நல்லகாலம் இவர்களின் சுயரூபம் தெரியூமுன்னே மெதுவாக விலகிக்கொண்டது. எல்லாரும் போகட்டும் எனது அன்புக்கு முழுவதுமே உரித்தான ராஜாவின் அன்பும் அரவணைப்பும் எனக்கு போதும். ஒரு வித நிறைவான மனநிறைவூடன் கணவர் றாஜாவைத் தேடுகின்றாள்.
றாஜன்… எனது றாஜன். எனக்கு மட்டுமே உரியவர். அவரால் மட்டும் எனது இழப்பைத் தாங்க முடியாது. வூழமையாக நாமிருவரும் பொழுதுபோக்கும் “பீச்” பக்கம்தான் போயிருப்பார். குடலின் ஒவ்வொரு அலைக்கும் என் இறப்பைப்பற்றி எங்கள் இருவரினதும் புரிந்துணர்வைப்பற்றி சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருப்பார். பெரியதொரு கற்பனையோடு “பீச்” பக்கம் வருகிறாள். தூரத்தில் வரும்போதே றாஜாவை இனங்காணகின்றாள். இதென்ன பக்கத்தில் ஒரு பெண். அவருக்குதான் பெண் சகோதரிகள் இல்லையே. சுரி நெருங்கி போய்த்தான் பார்ப்போமே. புதியவள் “அத்தான்” என்று அழைக்கிறாள். இதென்ன புதுக்கதை. தலை பாரமாக இருப்பதாக உணருகிறாள்.

இருக்காதுஇ இருக்காது எனது றாஜாவூக்கு மறுமணமா? ஒருபோதும் என்னை மறந்து இன்னொருத்தியை ஏற்றிருக்க மாட்டார். சதா றாஜன் என்னை நினைத்து உருகிக்கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியாது. அம்மா இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். றாஜி றாஜி என்று வலம் கொண்டிருந்தவர் ஒருபோதும் இன்னொருத்தியுடன் குடும்பம் மன்னநடத்த முடியாது. ஏதோ வேண்டாம் வெறுப்பாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் போலும் நினைத்துக்கொள்கிறாள் றாஜி. “அத்தான்” என்ற புதியவளின் குரல் கேட்டு சுயநினைவூக்குத் திரும்புகிறாள் றாஜி. இன்னும் இரண்டு மாதத்தில் இந்த வீடடில் ஒரு குட்டிப்பாப்பா பிறக்கப்போகிறது. அது ஆண்குழந்தையா பெண் குழந்தையா உங்கள் விருப்பம் என்ன அத்தான்? கட்டாயம் பெண் குழந்தைதான் பிறக்கும். எனக்கும் அதுதான் விருப்பம். றாஜன் சொல்லி முடிக்கும் முன்னே துணைவி குறுக்கிடுகிறாள். எனக்குத் தெரியும் பெண் குழந்தை பிறந்தால் றாஜி என்றும் பெயர் வைத்து சதா உங்கள் அருமைக்காதலியின் இனிமையான நினைவூகளை அசைபோட்டுக் கொள்ளலாம் என்பதுதானே உங்கள் ஆசை.
துள்ளி எழுந்துவிடுகின்றான் றாஜன். “றாஜி” என்ற பெயரை மறந்தே வருடங்கள் 5ஓடி மறைந்து விட்டன. “றாஜி” அவள் என்ன பெரிய அழகியா? சகலவிதமான வாய்ப்புக்கள் வசதிகள் நிறைந்த பெரிய இடம். குடும்பத்தில் மூத்த பெண் எப்படியூம் ஆஸ்தி நிறையக் கிடைக்கும் என்று நம்பித்தான் தொடர்ந்தேன். ஆறு மாதத்தில் உடத்தியிருந்த சல்வாரோடு வந்து நிற்பாள் என்று நான் எங்கே நினைத்தேன். இவ்வளவு அவசரமாக ஓடி வரும்படி யார் கேட்டது. வந்ததுதான் வந்தாள் எனது நிலைமையைப்புரிந்து கொள்ளாது ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டாள். இந்த ஆறு மாதத்தில் அவளின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய நான் பட்ட கஸ்டம் கொஞ்சமில்லை. ஏதோ நான் கும்பிடுகிற தெய்வம் என்னைக் கைவிடவில்லை. விபத்து என்ற உருவத்தில் அவளின் உயிரைப் பறித்து விட்டார். உண்மையில் அன்று பலிக்கெடாவாகவேண்டியவன் நான்தான். மெதுவாக என்மேல் வரவிருந்த அபாயத்தை அவன்பக்கம் திருப்பிவிட்டு நான் தப்பித்துக்கொண்டேன். இதற்கு மேல் றாஜியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மெதுவாக தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு தொப்பென்று கீழே விழுந்துவிட்டாள்.
சுயநினைவூ செய்து கண்விழித்த போது மிக்கேல் சம்மனசானவரின் காலடிகளில் கிடப்பதை உணருகிறாள். அவசரஅவசரமாக இருகைகளையூம் கூப்பிச் சம்மனசானவரைப் பார்த்து மன்னிப்புக்கோருவதுபோல யாசிக்கிறாள். சம்மனசானவர் கைகளால் சைகை காட்டிச் சரிசரியென்று சொல்வது போலப்பாவனை செய்துகொண்டு தொடருகிறார். நீ நிஜமில்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு நின்மதியில்லாமல் இருப்பதை விட நேரில் சென்று அனைத்தையூம் அனுபவமாகப் பெற்றுக்கொண்டது நல்லதுதான் சம்மனசானவர் சமாதானம் கூறுகின்றார்.
நாம் இறக்கும் போது எமது பூதவூடல் மட்டும் புதைக்கப்படுவதில்லை. எமது உறவூகள் கனவுகள் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் பட்டம் பதவி கௌரவம் அனைத்துமே புதைக்கப்படுகின்றன. எஞ்சியிருப்பதும் இறவாத வரம் கொண்டதும் ஒன்றே ஒன்றுதான். நாம் உயிரோடு இருக்கும் போது செய்த பாவங்களோ புண்ணியங்களோ இவற்றுக்குரிய இறைவனின் தீர்ப்பு மட்டுமே. இந்த உண்மையை உணர்ந்து வீண்கற்பனைகளில் காலத்தை வீணடிக்காது வாழப்பழகிக்கொள்வோம்.
பிலோமினா சுவாம்பிள்ளை பெரிய பண்டிவிரிச்சான் கிழக்கு