சிறுக்கண்டல் பங்கின் பங்குதந்தை அருட்பணி. டீ. றொசான் அடிகளாரின் தலைமையில் பிச்சைக்குளம் புனித செபமாலை அன்னை ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (தென்மோடி மரபு) இரு இரவுக்கதையாக “என்றிக் எம்பரதோர் நாடகம்” கடந்த ஆவணி மாதம் 19,20ஆம் தேதிகளில் பிச்சைகுளம் கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளார் கலந்து கொண்டதுடன் இன்னும் பல சிறப்பு விருந்தினரும், கௌரவ விருந்தினர்களும் கலந்து கொண்டனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் பிச்சைகுளம் பங்குதந்தை அருட்பணி. டீ. றொசான் அடிகளார் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

