2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் பரிபூரண பேறுபலங்களை மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 20.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புனித கதவு திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட முன்னை நாள் குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் அவர்களினால் இந்த புனித கதவு ஆசீர்வதித்து திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த திரு நிகழ்வில் பல அருட்தந்தையர்கள், ஏராளமான இறைமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.








