போதைப்பொருள் துஸ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள்

ARTICALS NATIONAL
மக்கள் சமுதாயத்திற்கும்இ ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாவிய அளவில் எடுத்திருக்கும் பிரச்சினைதான் இந்த போதைப்பொருள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருங்கொடையாகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. போதைப் பொருட்களினால் தனிமனிதன் குடும்பம்சமுதாயம்இ நாடு என எல்லா வகைகளிலும் பாதிப்புக்களே ஏற்படுகின்றன. 1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டு காணப்படுகின்றனர். இலங்கையில் 13-15 வயதுக்கு உட்பட்ட அதிகமான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் மூலம் அறியமுடிகின்றது.
தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும் குழப்பத்தையும் தனக்குத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது ,ஹெரோயின் ,கஞ்சா, ஐஸ் புகையிலை, போதை தரும் இன்ஹேலர்கள் இன்னும் பல வகைகள் அடங்கும்.போதையால் நடத்தையில் மாற்றங்கள்
இது போன்ற போதை வஸ்துக்களை நுகரும் பழக்கம் தற்போது இலங்கையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மருத்துவத் தேவைகளுக்காக ஹெரோயினை பெறமடியாத தட்டுப்பாட்டு நிலைகள் ஏற்படும் போதும் போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை உட்கொள்வதுண்டு. மருத்துவரின் மருந்துச் சீட்டின்றி இவற்றை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. சுட்டவிரோதமான செயலாக இருப்பினும் இவற்றை பெறுவது சிரமமான விடயமாக இல்லை. இவற்றை நுகர்ந்த பல சம்பவங்கள் பதிவாகியதால் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வழிநடத்தலுடன் சுகாதார அமைச்சு இது போன்ற மருந்து வகைகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்தியும் கண்காணித்தும் வருகின்றது.
பள்ளிப்பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கத்தினாலும் மற்றும் பொழுதுபோக்காக பழகிக் கொண்ட இந்தப் பழக்கத்தை இன்றுவரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள். பலமுறை இத்தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டுமென முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதற்கும் அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.
இத்தகைய போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கைஇ சமுதாய அந்தஸ்துஇ அலுவலக வேலைஇ நட்பு உறவினர்கள் மற்றும் தொடர்புகள்; என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டு விடுகின்றது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத்தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
ஏல்லோருக்கும் எளிமையாகவும் பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப்பொருள்தான் சாராயம் மற்றும் அதைச்சார்ந்த மதுவகைகள். இந்தப் பழக்கத்தை தற்போது பள்ளிப்பருவத்திலேயே பழகிக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் அரசே ஆங்காங்கே அமைந்திருக்கும் மதுக்கடைகளும் இதற்குக் கிடைத்தி|ருக்கும் அங்கிகாரமும் தான். திரைப்படங்கள் இத்தகைய பழக்கம் இளைஞர்கள் செய்வது தவறில்லை என்று சித்தரிப்பதும் மகிழ்ச்சி மற்றும் துக்கவேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
மது பரிமாறல் மேலைநாட்டுக் கலாசாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரரணமாகும். பிரச்சினைகள் மற்றும் குறைககளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக் கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்தி விடுகின்றன. தன்னைச் சுற்றியூள்ளவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவரை திருத்த முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாங்களும் கற்றுக் கொள்கின்ற பலரும் இருக்கின்றார்கள்.
இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப்பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை போதைக்கு அடிமையாக்கி விடுகின்றது. போதைப்பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கின்றார்கள். உடல் சோர்வடைதல் குற்றஉணர்ச்சி தனிமையை தேடுவது போன்ற அவல நிலைக்க உள்ளாகின்றார்கள். போதைப்பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் சமுதாயப் பாதிப்புக்கள் குடும்பப் பாதிப்புக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
உலகநாடுகள் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஹெரோயின் கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரி வாசல்களிலேயே விற்கப்படுவதையும் விற்பவர்கள் கைது செய்யப்படுவதையும் பத்திரிகைகளில் படிக்க நேரிடுகின்றது. சுற்றுலாத்தலங்களிற்கு அருகாமையில் சிதறிக்கிடக்கும் மது போத்தல்களும்இ ஊசிகளும் பலரும் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதற்குச் சான்று பகருகின்றது. ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போவதாகும்.
பாடசாலை மாணவர்கள் தலைநகரில் போதைப்பொருட்கள் பாவிப்பது இன்று வேகமாகப்பரவி வருகின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி உரிய கவனம் எடுக்காத பட்சத்தில் இனிவருங்காலம் ஆதாள பாதாளத்திற்குள் சென்றுவிடும். போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சிலரிடம் கருத்துக் கேட்டபோது போதைப்பொருளைப் பாவிப்பர்களினால் எங்களுடைய பிள்ளைகளும் இந்தப் பழக்கத்திற்கு உள்ளாகுபவர்களாக மாற வாய்ப்பு இருக்கின்றது என கூறுகின்றனர்.போதைக்கு அடிமை என்பதை அறிந்து கொள்ளல்
ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல் மற்றும் அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றுதல். ஏதை இழந்தாலும் போதை தரக்கூடிய பொருளை அந்தந்த நேரத்தில் தனக்கு கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல் அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளதல். இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டுமென சபதம் ஏற்று பலமுறை தோல்வியடைவது.
அவர்களது நடத்தைகளைப் பார்த்தால் மற்றவர்களைப்போல் அல்லாது சற்று வித்தியாசமான முறையில் நடந்து கொள்ளுதல். இதை அவர்கள் மாற்ற மயற்சித்தாலும் அதில் அவர்கள் மாற்ற முயற்சித்தாலும் அதில் அவர்கள் முழுவதும் தோல்வி அடைதல்.
போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு எத்தனை மறுவாழ்வு மையங்கள் அலோபதி ஆயர்வேத சித்த மருத்துவம் என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறைநம்பிக்கையில் தன் மனதைச் செலுத்தி இது பாவம் என எண்ணி கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும்தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து மீள்வது சாத்தியமாகும். இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருளுக்கெதிரான உலகமாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் புகைத்தல் போதைப்பொருள் பாவனையின் காரணமாக நாளொன்றிற்கு 100பேர் மரணிப்பதாக இலங்கை மது மற்றும் பொதைப்பொருள் தகவல் மையம் அறிக்கை விடுத்தள்ளது.
இலங்கை அரசாங்கம் 2024ஆம் ஆண்டை போதைப்பொருட்களற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டுமென்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு போதைப்பொருள் முற்றுப்புள்ளித்திட்டம் மட்டும் போதுமானதல்ல. சகலரது பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப்பொருள் ஒழிப்பை வெள்ளிகரமாக முன்னெடுக்க முடியும். போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம் இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை.போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தலின் அளவை கூறும் மானியாக இருப்பது அதிகாரம் பெற்ற அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பெறப்படும் தரவுகளாகும். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் முக்கிய மையங்களாக கொழும்பு மற்றும் மாலே இருப்பது பற்றி செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
இன்று வர்த்தகரீதியில் போதைப்பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில பெரும் புள்ளிகள் இருப்பதினாலும் இதனை அல்லாதொழிப்பது ஒரு கடினமான செயலாகும். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகளும் பாதிப்புக்களும் அழிவூகளும் குறித்து மக்களிடையே விழிப்பணர்வை ஏற்படுத்தவதற்காக ஜீன் 26ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்பமும் துன்பமும் கலந்த கலவையாக விளங்கும் வாழ்க்கையின் உண்மையான தார்ப்பரியத்தை ஜீரணிக்கத் திராணியற்று தமது பிறவிப்பயனுக்காக நோக்கத்தை மறந்து தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் எதுவித பிரயோசனமுமற்ற வகையில் முற்றுமுழுதான போலியான உலகொன்றில் சஞ்சரிக்க விளைபவர்களின் பாலைவனச் சோலையாக போதைப்பொருட்கள் விளங்ககின்றன.
போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று பெரும்பாலாக சோர்வடைந்து துன்பத்தில் வாடும் மனதிற்கு மகிழ்ச்சி தரவும் ஒரு உற்சாகமான பொது விடயநோக்காக புது அனுபவத்தை பெறவும் அதனை உபயோகிப்பதாக தெரிகின்றது. ஆனால் அந்த சொற்பநேர மகிழ்ச்சியே பலரது வாழ்வையும் நிலைகுலைய வைத்து குடும்ப உறவூகளை சிதைத்து வாழ்வின் முன்னேற்றத்தை பாழ்படுத்தி அவர்களை நடைபிணமாக வாழ்ந்து காலதேவனின் பிடியில் சிக்கி சொற்ப ஆயுளில் மரணத்தைத் தழுவ வழிவகை செய்துவருகின்றது.
போதைவஸ்துப் பாவனையானது கொள்ளை கொலை வன்முறைகள் உள்ளடங்கலான குற்றச்செயல்களுக்கும் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்ளல் மற்றும் தற்கொலை போன்றவற்றிற்கு காரணமாயிற்று. பதின்ம வயதினரை சுலபமாக தொற்றிக்கொள்ளும் பழக்கமாக உள்ளது. சிறுவயதில் பழகிய பழக்கங்களை இலகுவில் மாற்றமுடியாது என்று கூறுவார்கள். அந்த வகையில் பதின்ம வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் ஒருவரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பது “கல்லில் நார் உரிப்பது” போன்ற கடினமான செயலாக உள்ளது.
ஒருசிலர் மது உள்ளடங்கலாக போதைப்பொருள் பாவனையுள்ள நண்பர்களால் தாம் ஓரங்கட்ட நேரிடும் என்ற அச்சத்தில் போதைப்பொருளை உபயோகிக்க ஆரம்பித்து பின்னர் அதிலிருந்து மீளமுடியாது அதற்கு அடிமையான கதைகளும் அதிகம். இதன் காரணமாகவே இளம் வயதினரும் வயது வந்தவர்களும் தமது நட்ப வட்டாரங்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டியுள்ளது. நம் நாடானது தமது பொறுப்பை உணர்ந்து போதைவஸ்து கடத்தலை அடியோடு ஒழிப்பதற்கு மேலும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானதொன்றாகும்.

சு. டிலுஜன்.
மடுமாதா சிறிய குருமடம்
மன்னார்.