மடு திருத்தலத்தில் திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்கள்

CHURCH NEWS DIOCESE
செப ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்கள் கடந்த 23.10.2024 புதன்கிழமையன்று மருதமடு மாதா திருத்தலத்திற்கு சென்று அந்நாளை செப நாளாக அனுஸ்ரித்திருந்தனர். திருச்செபமாலை, திருப்பலி,நற்கருணை ஆராதனை,தனிச்செபம் என மடுத்திருப்பதியில் நேரம் செலவிட்டதுடன் “சிறுவர்கள் வாழ்வில் செபம்” என்னும் தலைப்பில் அருட்தந்தை யூட் குரூஸ் அடிகளாரால் கருத்துரையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 60ற்க்கும் மேற்பட்ட ஊக்குவிப்பாளர்கள் பங்கெடுத்திருந்தனர். இதனை மன்னார் மறைமாவட்டப் பாப்பிறைகளின் சபை அதாவது திருப்பாலத்துவ சபை ஆணைக்குழு இயக்குநர் அருட்பணி. சாள்ஸ் தயாளன் கூஞ்ஞ அடிகளார் ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து சிறப்புற ஒழுங்குபடுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *