திருக்குடும்ப கன்னியர்களால் நடாத்தப்படும் திருக்குடும்ப கன்னியர் முன்பள்ளியில் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு டிசம்பர் மாதம் 03ம் திகதி செவ்வாய்க்கிழமை “செபத்தில் ஒன்றிணைந்த இயேசுவின் பிறப்பு” என்னும் கருப்பொருளில் மன்னார் நகரசபை மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி றீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்டக் கலையருவி சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி. லக்ஸ்ரன் டி சில்வா அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக புனித செபஸ்தியார் பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்பணி. சார்ள்ஸ் கிளிங்ரன் அடிகளார், வவுனியா திருக்குடும்ப கன்னியர் இல்ல அனிமேரர் அருட்சகோதரி றதினி கீதபொன்கலன் ஆகியோரும்,சிறப்பு விருந்தினர்களாக புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் உயர்தரப் பகுதித் தலைவர் ஆசிரியை சுசிலா ஜஸ்ரின் மற்றும் ஓய்வூபெற்ற நிர்வாக அதிகாரி செல்வி. சாந்தி கஸ்மீர் ஆகியோரும் மற்றும் அருட்சகோதரிகள்,பிள்ளைகளின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

