மன்னார் மறைமாவட்ட மறையாசிரியருக்கான ஒன்றுகூடலும் மற்றும் நிர்வாகத்தெரிவும் இன்று அதாவது 18.01.2025 சனிக்கிழமை காலை 08.30 தொடக்கம் நண்பகல் 12.45 வரை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குநர் அருட்பணி. மரியதாசன் றொக்சன் குரூஸ் அடிகளாரின் தலைமையில் “அவர் நம்மை அன்பு செய்கிறார்” (Dilexit Nos) என்ற சுற்று மடலின் பிண்ணனியில் “மறைவாழ்வு பணியாளர்களும் யூபிலி ஆண்டும்.” என்னும் தலைப்பில் வளவாளர் அருட்.பணி. றஞ்சன் சேவியர் அடிகளாரசின் சிறப்புரையுடன் நடைபெற்றதோடு இவ் ஒன்றுகூடலில் இவர்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் மன்னார் மறைக்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்புற இடம்பெற்றது.
திருத்தந்தை பிரான்ஸிஸ், மறைவாழ்வுப்பணியாளர்கள் நம்பிக்கைக்கு சாட்சிகளாக உள்ளனர், அவர்கள் தங்கள் நம்பிக்கையை மற்றவர்களுக்கு கற்பிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், அழைக்கப்படுகிறார்கள். மேலும் மறைவாழ்வுப்பணியாளர்கள் அணுகக்கூடியவர்களாகவும், வரவேற்கக்கூடியவர்களாகவும், பொறுமையுள்ளவர்கவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




