விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் வாசிப்பு மாதம் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு பாடசாலையில் தரம் 12 கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி செல்வி அ. அபிநயா அவர்களால் “முதலடி” எனும் கையெழுத்து சஞ்சிகையானது “சஞ்சிகை தினமான” கடந்த 22.10.2024 செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை காலைக்கூட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டு பாடசாலை நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும் அதன் மூலமான “எழுத்தாக்க திறன் விருத்தி” பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் இச் சஞ்சிகையை வெளியீடு செய்த செல்வி அபிநயா அவர்களை மன்னா சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.

