யாழப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட தமிழியல் நூலகத் திறப்பு விழா கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விசேட நூலகப் பிரிவிற்கான நிதி அனுசரணை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியம் வழங்கியிருந்தது. துமிழியல் நூலகம் எனப்பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் நினைவுக் கல்லும் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசனின் உருவப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன.

