யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய “உதிரக்கனி இயேசு” என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சத்தியசீலன் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்துடன் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பெற்றோர் தின நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக யாழ் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை வருகைதரு விரிவுரையாளர் திரு. அன்ரூ யூலியஸ் அவர்களின் நெறியாழுகையில் உருவான “வீரன் தாவீதன்” வடமோடி கூத்தும் தரம் ஐந்து மாணவர்களால் மேடையேற்றப்பட்டது.





