செப ஆண்டை முன்னிட்டு பிள்ளைகளின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரவும் செபவாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் திருப்பாலத்துவசபை பிள்ளைகளுக்கான நாடகப்போட்டியானது “செபம் நம்மை வலிமையாக்கும்” என்னும் தலைப்பில் கடந்த 14.09.2024 சனிக்கிழமையன்று மன்னார் மாவட்ட பங்குகளிற்கிடையிலான போட்டி மன்னார் கலையருவி மண்டபத்திலும் கடந்த 15.09.2024 ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியா மறைக்கோட்ட பங்குகளிற்கிடையிலான போட்டி வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ற்புப்பணி மண்டபத்திலும் காலை 09.30 மணிக்க இரு பிரிவாக நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த இப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து 19 பங்குகளும் வவுனியா மறைக்கோட்டத்தில் இருந்து 06பங்குகளும் பங்குபெற்றியிருந்தனர். அதில் மன்னார் மாவட்டத்தில் முதலாம்,இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே தலைமன்னார்,தாழ்வூபாடு,கற்கிடந்தகுளம் ஆகிய பங்குகளும் மற்றும் வவுனியா மறைக்கோட்டத்தில் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்களை முறையேமகா இறம்பைக்குளம,வேப்பங்குளம்,செட்டிகுளம் ஆகிய பங்குகளும் பெற்றிருந்தன. இந்நாடகப் போட்டியினை தலைமைதாங்கி நடாத்திஅனைத்து ஒழுங்குகளையும் சிறப்புற செய்த மன்னார் மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்பு சபை இயக்குனர் அருட்பணி தயாளன் கூஞ்ஞஅடிகளார் அவர்களிற்கும் போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய அனைத்துபங்குகளின் சிறார்களிற்கும் அவர்களை ஆயத்தப்படுத்திய பங்குதந்தையர் அருட்சகோதரிகள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் அனைவருக்கும் எமது மன்னா சமூகம் சார்பான பாராட்டுக்களையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.







