இலுப்பைக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய பலிப்பீட அபிஷேக யூபிலி விழா மற்றும் திருவிழா

CHURCH NEWS DIOCESE
இலுப்பைக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய பலிப்பீட அபிஷேக யூபிலி விழா மற்றும் திருவிழாவவுனியா மறைக்கோட்டத்தின் இயற்கை வளங்கள் இன்னிசை பாடும் இலுப்பைக்குளம் பங்கின் புனித அடைக்கல அன்னை ஆலயம் தோன்றி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு 26வது ஆண்டு யூபிலி விழாவினை பங்கு சமூகம் சிறப்புற கொண்டாடியது.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக புதிதாக பலிப்பீடம் ஒன்று அமைக்கப்பட்டு கடந்த 27.08.2024 செவ்வாய்க்கிழமையன்று மன்னார் மறைமாவட்டஆயரினால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. கடந்த 08.09.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆலயஅபிஷேக யூபிலி விழா மற்றும் ஆலயத் திருவிழாவானது மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பிடலிஸ் லயனல்இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இப்பெருவிழா யூபிலி நன்றித் திருப்பலியில் தந்தையோடு பல அருட்பணியாளர்களும்   அருட்சகோதர,சகோதரிகளும் மற்றும் நூற்றுக்கணக்கானஇறைமக்களும் இணைந்துகொண்டு அன்னையின் ஆசீரைப் பெற்றனர். அத்தோடு இந்நன்நாளின் நினைவாக இலுப்பைக்குளம் அடைக்கல அன்னைஆலய வெள்ளிவிழா சிறப்பு மலரும் ஆயர் தந்தையினால் வெளியிடப்பட்டது.
“கோவிலில்லா ஊரிலே குடியிருத்தலாகாது எனும் கூற்றுகிணங்க தம் ஆன்ம தாகத்திலே புனித அடைக்கல அன்னைக்கு ஆலயம்எழுப்பி 25வது ஆண்டினை நிறைவு செய்து 26வது ஆண்டிலே அடியெடுத்து வைத்துள்ள இலுப்பைக்குளம் பங்கு மக்களையும் பங்கின்வளர்ச்சிக்காக இதுவரை பணியாற்றிய அருட்பணியாளர்கள் அருட்சகோதர சகோதரிகள் மற்றும் ஆலய உருவாக்கத்திலே துணை நின்ற இறைமக்கள் அனைவரையும் மன்னா சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம். இப்பெருவிழா யூபிலி நன்றித்திருப்பலிக்கான அனைத்து ஆயத்தங்களையும் இலுப்பைக்குளம் பங்குதந்தை அருட்பணி வரதன் குருஸ் அடிகளார் அருட்சகோதரிகளடனும் பங்கு இறைமக்களுடனும் இணைந்து அருட்சியான முறையில் ஒழுங்கமைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *