மளுவராயன் கட்டையடம்பன் புனித சந்தோமையார் வாசகப்பா மளுவராயன் கட்டையடம்பன் பங்கு புனித செபமாலை மாதா ஆலய பங்குமக்களின் “புனித சந்தொம்மையார் வாசகப்பா கடந்த 28.08.2024புதன்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்துகொண்டிருந்தனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் மளுவராயன் கட்டையடம்பன் பங்குதந்தை அருட்பணி. லுமன் லோகு அடிகளார் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

