முருங்கன் பங்குதந்தை அருட்பணி. செ.இராஜநாயகம் அடிகளாரின் தலைமையில் முருங்கன் புனித யாகப்பர் ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ரூடவ்டுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு இரவுக்கதையாக “புனித சந்தியோகுமையோர் நாடகம்” கடந்த ஆவணி மாதம் 29,30ஆம் தேதிகளில் முருங்கன் கமம் கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதலாம் நாளில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதுடன் இரு நாட்களும் இன்னும் பல சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்து கொண்டனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் முருங்கன் பங்குதந்தை அருட்பணி. இராஜநாயகம் அடிகளார் உதவி பங்குதந்தை அருட்பணி பி.றஜீவன் லியோன் அடிகளாரினதும் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழங்கமைத்திருந்தார்.

