குருத்துவ அருட்பொழிவு அருட்சகோ. அன்று பிராங்லின் பத்மலிங்கம்

CHURCH NEWS DIOCESE
மன்னார் மறைமாவட்டம் பேசாலைப்பங்கைச் சேர்ந்த திருவருள்ப்பணியாளர் சபைத் திருத்தொண்டர் அன்று பிராங்லின் பத்மலிங்கம் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி புதன்கிழமையன்று நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் அன்ரூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார். இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் திருவளப்பணியாளர் சபை முதல்வர் அருட்பணி. மார்க் ஆந்ரே சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்பணி. கொட்வின் கமிலஸ் சனா அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்இ அருட்தந்தையின் உறவினர்கள் மற்றும் இறைமக்கள் எனப் பலரும் கலந்து செபித்திருந்தனர். புதிய குருவின் பணி சிறக்க மன்னா சமூகம் சார்பாக செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *