மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் அனுசரனையுடன் அளவக்கை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்டபோட்டியானது கடந்த அக்டோபர் மாதம் 16,17 ஆகிய இரு தினங்களிலும் அளவக்கை பங்கு மாவிலங்கேணி கிராமத்தின் பாடசாலை மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரும் கௌரவ விருந்தினராக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரும் சிறப்பு விருந்தினராக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அலெக்சாண்டர் சில்வா அடிகளாரும்,தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தலைவர் மற்றும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தலைவர் ஆகியோரும் மேலும் பல பங்குத்தந்தையர்களும் அத்தோடு அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி டிக்சன் அடிகளார்,அளவக்கை பங்குச்சபைத் தலைவர் மற்றும் செயலாளர்,மாவிலங்கணி பாடசாலை அதிபர் திரு. ஜோன் போல்இ மற்றும் பல நன்கொடையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் ஆண்கள் அணிகளில் முதல் இடத்தைப் பெற்ற தோட்டவெளி அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 15000 இனை குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளாரும்இ இரண்டாம் இடத்தினைப் பெற்ற காத்தான்குளம் அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 10,000 இனை முருகன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அலக்சாண்டர் சில்வா அடிகளாரும் மற்றும் பெண்கள் அணிகளில் முதல் இடத்தினைப் பெற்ற அளவக்கை அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 7,000 இனை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரும்,இரண்டாம் இடத்தினைப் பெற்ற கீளியன்குடியிருப்பு அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 5,000 இனை மாவிலங்கணி பாடசாலையின் அதிபர் ஜோன் போல் அவர்களும் வழங்கி வைத்தார்கள்.
இப்போட்டிக்கான அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்ட அனைத்து அருட்பணியாளர்கள் இளையோர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருகும் மன்னா சமூகம் சார்பான பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

