மடு மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான ஒரு நாள் வலுவூட்டல் பயிற்சி பாசறை குஞ்சுகுளம் புனித அங்கமத்து மாதா ஆலயத்தில் கடந்த 17.10.2024 வியாழக்கிழமையன்று இடம்பெற்றது. இதிலே மடு மறைக் கோட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலிருந்தும் 70ற்கும் மேற்பட்ட அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயன் பெற்றனர். நற்கருணை ஆராதனைஇ கருத்துரைகள், வலுவூட்டல் விளையாட்டுக்கள், கலை நிகழ்வூகள், குழு ஆய்வுகள் என்பன ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இவ் ஒன்றுகூடலானது மடு மறைக்கோட்ட முதல்வர்,மற்றும் குஞ்சுகுள பங்குத்தந்தையின் ஆதரவுடன்,மன்னார் மறைமாவட்ட அன்பிய மத்திய குழு ஒழுங்குப்படுத்தலில் இடம்பெற்றது. மடு மறைக்கோட்ட பல அருட்தந்தையர்கள் பிரசன்னமாகியிருந்தது பணியாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.