“கொடுப்பீரே ஆசீர்”

ARTICALS

“கொடுப்பீரே ஆசீர்”

 

கல்லறைத் திருநாளாம்

கார்த்திகை இரண்டு

கண்மூடித் தூங்கும்

எம்மவர் நினைவு

 

நித்திய தேசமாம்

மோட்சத்தை தேடி

நிம்மதியாய் உறங்கும்

உத்தமர் நினைவு

 

கண்ணிலே கண்ணீர்

வந்தாலும் கூட

கருணையின் தேவனை

காண்பது அவர்களே

 

வாழ்ந்திட்ட நினைவுகள்

வந்தாலும் கூட

நெஞ்சிலே நிறுத்துவோம்

நிலையான வாழ்வை

 

மாநாத எண்ணங்கள்

வந்தாலும் கூட

மன்னவன் இயேசு

அணைத்திடுவார் மார்பினில்

 

உலகினில் வாழ்வது

பொய்யான வாழ்வு

உண்மையான வீடு

மோட்சத்தின் வீடே

 

இறைவா!

வாழ்ந்திட்ட நாளில்

செய் பிழை பொறுப்பீர்

நித்திய மோட்சத்தில்

கொடுப்பீரே ஆசீர்.

 

ஆக்கம் : சி. சுஜீவன் மடுறௌட்.