உங்கள் தியாகம் எங்கள் வாழ்வு
கருவறையில் நீங்கள் உண்ட உணவு எங்கள் உணவு
உங்கள் இரத்தம் நாங்கள் குடித்த பால்
எங்கள் பிறப்பில் உங்கள் வேதனை எத்தனை
பாராட்டிச் சீராட்டித் தாலாட்டுப் பாடிய காலங்கள்
பட்டினியில் எங்களுக்குச் சோறும் உங்களுக்குத் தண்ணீரும்
இயற்கை அழிவுகளில் எங்களைக் காத்த கரங்கள்
யூத்த காலத்தில் தூக்கி ஓடிய கால்கள் தடங்கள்
கொரோனா வேளை முகக் கவசம் அணிய வைத்த அறிவூட்டல்
எங்கள் படிப்புக்காக நீங்கள் செய்த தியாகங்கள்
விசுவாசம் ஒழுக்கம் என்ற பண்பை விதைத்த சொற்கள்
நேர்மையான உழைப்பு பற்றிக் கொடுத்த விளக்கம்
எங்கள் எதிர்கால வாழ்வு பற்றிய அக்கறை
எங்களுடைய திருமண வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பு
குழந்தைப் பேற்றிற்காக இறைவேண்டல் செய்த நாட்கள்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற செபித்த செபங்கள்
இழப்புக்களில் தாங்கக் கூடிய ஆறுதல் வார்த்தைகள்
இத்தனை தியாகங்கள் செய்த நீங்கள் இறக்கவில்லை
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள்ளும் இல்லை
தியாகங்கள் என்ற உள்ளக் கல்லறைக்குள் வாழ்கிறீர்கள்
உங்கள் ஆன்மா விண்ணகத்தில் இருக்கப் பிரார்த்திக்கின்றௌம்.
யூ. சுசிலா ஓய்வு பெற்ற ஆசிரியர் அச்சங்குளம்.

