வவுனியாவில் அமைந்துள்ள மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் கிறிஸ்து பிறப்பு ஒளி விழா நிகழ்வுகள் கடந்த 05-12-2024 வியாழக்கிழமை காலை 9:30 மணிமுதல் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றது.இவ் ஒளி விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும், சிறப்பு அதிதிகளாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.கிறிஸ்து நாயகம் அடிகளாரும்,மேலும் இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளார், வவுனியா லொயாலா பல்கலைக்கழகத்தின் அதிபரும், இயக்குனருமான அருட்தந்தை எமில் அடிகளார், ஆயரின் செயலர் அருட்தந்தை ஜோச் கரன்அடிகளார், அருட்தந்தை இயேசுராஜா அடிகளார், மற்றும் இறம்பைக்குளம் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல் ரோய் அடிகளார்,திருக்குடும்ப கன்னியர் இல்ல அருட்சகோதரிகள், இறம்பைக்குளம் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள்,அனைவரும் ஆர்வத்தோடு பங்குகொண்டு நிகழ்வுளை சிறப்பித்திருந்தார்கள்.
இவ் ஒளி விழா நிகழ்வுகள் அனைத்தும் ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அடிகளார் மற்றும் உப அதிபர் அருட்தந்தை அலஸ் அன்ரனி அடிகளார் ஆகியோரின் வழிநடத்தலில் விழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது.





