கடந்த பல ஆண்டுகளாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாக இயங்கி வந்த தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயமானது தற்பொழுது புதிய திருத்தலமாக ஆயரினல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் 3ம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் தள்ளாடித் திருத்தலத்தின் முதலாவது பரிபாலகராக அருட்தந்தை வசந்தகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டார். புதிய பரிபாலகராக அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருத்தலமானது தினமும் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரைக்கும் மக்களின் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்படும்.
திருத்தலத்தில் நடைபெற உள்ள விசேட வழிபாடுகளும் நேரங்களும்.1 தினமும் (7 நாட்களும்) காலை 11.00 மணிக்கு திருப்பலி இடம்பெறும்.
2 செவ்வாய்க் கிழமைகளில் மாலை 5.00 மணிக்கு இரண்டாவது திருப்பலி இடம் பெறும்.
3 தினமும் காலை 10.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை பாவசங்கித்தன அருட்சாதனம் வழங்கப்படும்.
4 ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரைக்கும் நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டு மக்களின் ஆராதனைக்காக வைக்கப்படும்.இதுவரை காலமும் தள்ளாடி புனித அந்தோனியார் யாத்திரை ஸ்தலத்தை பராமரித்து வந்த பேராலயப் பங்குத்தந்தையர்களுக்கும் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். சிறப்பாக புதிய பரிபாலகாராக பணிப்பொறுப்பெடுப்பதற்கு அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொண்ட பங்குத்தந்தை அருட்பணி சுரேந்திரன் றெவ்வல் அடிகளாருக்கு எனது சிறப்பான நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.

புனித அந்தோனியாரின் பரிந்துரை உங்கள் அனைவருக்கும் நிறைவாய்க் கிடைப்பதாக.
அருட்பணி பி. கிறிஸ்துநாயகம்
குருமுதல்வர்
மன்னார் மறைமாவட்டம்.