மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்குத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தின் முத்தரிப்புத்துறைப் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் தர்சன் லியோன் அவர்கள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

