வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் திருவிழாத் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக நடைபெற்றது. மேலும் ஆயர் தந்தையோடு இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா, உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல் ரோய்,அருட்தந்தை இயேசுராஜா, ஆயரின் செயலர் அருட்தந்தை கரன்ஸ், வவுனியா லொயாலா பல்கலைக்கழகத்தின் அதிபரும் இயக்குநருமான அருட்தந்தை எமில்,வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் அதிபர் அருட்தந்தை அருட்குமரன், உப அதிபர் அருட்தந்தை அன்ரனி அலஸ் ஆகியோரும் கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தார்கள். அத்தோடு திருப்பலி நிறைவில் கிறிஸ்து அரசரின் திருச்சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு ஆலயத்தை வந்தடைந்ததுடன் கிறிஸ்து அரசரின் பரிந்துரை வேண்டி ஜெபம் சொல்லப்பட்டு ஆயர் தந்தையினால் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது. அனைத்து ஒழுங்குகளையும் சிறப்புற ஒழுங்கமைத்திருந்த இறம்பைக்குளம் பங்குதந்தை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அடிகளார்க்கும் அவரோடு உடனிருந்த உதவிப்பங்குத்தந்தை விமல் ரோய் அடிகளார், அருட்சகோதரி யூயின்,வழிபாட்டுக்குழுவினர்,பாடகர்குழுவினர்,பீடப்பணியாளர்கள், ஆலயசபையினர், ஆலயமக்கள் அனைவருக்கும் மன்னா பத்திரிகையின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.





