தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று காலை 06.00 மணிக்கு பொங்கல் திருப்பலி இடம் பெற்றது. இத் திருப்பலியை அமல மரி தியாகிகள் சபையினுடைய குருவானவர் அருட்பணி அமலதாஸ் அடிகளார் தலைமை ஏற்று திருப்பலியே ஒப்புக்கொடுத்தார். இன்றைய தினத்தை சிறப்பிக்க தலைமன்னார் உள்ள ஏழு வலையங்களுக்கும் பொங்கல் பொங்குவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் இடங்களில் ஏழு வலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொங்கல் பொங்கியமையுடன் அழகான கோலங்களையும் போட்டனர். ஏற்கனவே மிகச்சிறந்த கோலத்திற்கான பரிசு வழங்கப்படும் என பங்கு தந்தை டெனி கலிஸ்டஸ் அடிகளாரினால் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி வலைய உறுப்பினர்கள் தங்களுடைய கோலங்களை பொங்கல் பானைக்கு அருகாமையிலே போட்டு இருந்தமை குறிப்பிடத்தக்க. இதேபோன்று தலைமன்னார் ஸ்டேஷன் செபமாலை மாதா ஆலயம், தலைமன்னார் பியர் சதா சகாய மாதா ஆலயம் போன்ற இடங்களிலும் அன்பியங்களாக இறை மக்கள் பொங்கல் நிகழ்வை சிறப்பித்தமையுடன் கோலப் போட்டிகளிலும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. அருட்பணியாளர் அவர்கள் அனைத்து பொங்கல் பானைக ளையும் ஆசீர்வதித்த பின்பு இறை மக்கள் அனைவரும் வலையம் வலையமாக தமது பொங்களை உண்டு மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.







