உயிலங்குளம் பங்கின் திருப்பாலத்துவ சபை சின்னம் சூட்டும் நிகழ்வு 02.02.2025

CHURCH NEWS DIOCESE

உயிலங்குளம் பங்கின் சிறார்களை திருப்பாலத்துவ சபையின் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது இன்று மிகவும் சிறப்பான முறையில். இடம்பெற்றிருந்தது. இன்றைய நாள் சிறப்பு திருப்பலியினை உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. சாந்தன் சோசை அடிகளாரும் மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்து சபை ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை தயாளன் கூஞஞ அடிகளாரின் தலைமையிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது . இப்திருப்பலியில் பங்கு மக்கள் அருட்சகோதரிகள் ஊக்குவிப்பாளர்கள் என பலர் இணைந்து சிறார்களுக்காக செபித்தும் இருந்தனர்.

இந்த சின்னம் சூட்டல் நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Image 1

Image 2

Image 3

Image 4

Image 5

Image 6

Image 7

Image 8

Image 9