மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா

கடந்த 29.01.2025 புதன்கிழமையன்று அடம்பன் சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் வருடாந்த மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா 2024 ஆனது அடம்பன் பல்நோக்கு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. அரவிந்தராஜ் அவர்களும்ரூபவ் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு. டிலைக்சன்ரூபவ் அடம்பன் பாடசாலை அதிபர் திரு. கிறிஸ்ரியான் ஆகியோருடன் அடம்பன் கிராம அலுவலர்ரூபவ் டெப்லிங் நிறுவனப் பணியாளர்கள் ஏனைய சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் […]

Continue Reading

உயிலங்குளம் பங்கின் திருப்பாலத்துவ சபை சின்னம் சூட்டும் நிகழ்வு 02.02.2025

உயிலங்குளம் பங்கின் சிறார்களை திருப்பாலத்துவ சபையின் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது இன்று மிகவும் சிறப்பான முறையில். இடம்பெற்றிருந்தது. இன்றைய நாள் சிறப்பு திருப்பலியினை உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. சாந்தன் சோசை அடிகளாரும் மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்து சபை ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை தயாளன் கூஞஞ அடிகளாரின் தலைமையிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது . இப்திருப்பலியில் பங்கு மக்கள் அருட்சகோதரிகள் ஊக்குவிப்பாளர்கள் என பலர் இணைந்து சிறார்களுக்காக செபித்தும் இருந்தனர். இந்த சின்னம் […]

Continue Reading

புதிய ஆலய அபிஷேக நிகழ்வு – 01.02.2025

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் பேராலயப் பங்கின் புனித மரியன்னை ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று அதாவது 01.02.2025 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இவ்வாலயத் திறப்பு விழாவும் ஆலய மற்றும் பலிப்பீட அபிஷேக நிகழ்வும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வை மன்னார் பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி. சுரேந்திரன் அடிகளார் பங்கு அருட்பணி பேரவையின் ஒத்துழைப்போடு அழகுற ஒழுங்குபடுத்தியிருந்தார். இந்நிகழ்வில் மன்னார் […]

Continue Reading

புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகளின் முதல் அர்ப்பண திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின் புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகள் துறவற சபையில் மன்னார் மறைமாவட்டத்தின் பெரிய குஞ்சுகுளம் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி ஜெஸ்மிலா மற்றும் யாழ் மறைமாவட்டத்தின் வலைப்பாட்டு பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி சஜித்தா ஆகியோர் தமது துறவற சபையின் முதல்வி அருட்சகோதரி மேரி டாலர் முன்னிலையில் தமது முதல் அர்ப்பணத்தை இன்று அதாவது 29.01.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் சிறுக்கண்டல் பங்கு, களிமோட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மேற்கொண்டனர். அர்ப்பண நிகழ்வு திருப்பலியை […]

Continue Reading

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாத் திருப்பலி

மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்கள் யாழ். மறைமாவட்டத்தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டமாக உதயமாகியதன் 44 ஆண்டுகள் நிறைவு விழா நன்றித் திருப்பலி 25.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத் திருப்பலியில் மன்னார் மறைமாட்ட தேர்வுநிலை ஆயர் வணக்கத்துக்குரிய அருட்பணி. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் […]

Continue Reading

கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் மறைக்கூட்டத்தைச் சேர்ந்த கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று திங்கள் 20.01.2025 காலை 7.00 மணிக்கு அருட்பணி. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலும் , பங்குத்தந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளாரின் வழிநடத்தலிலும் மிக சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் இடம்பெற்றது. இந்த திருவிழா திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு புனித. செபஸ்தியாரின் அருளை பெற்று சென்றனர்.

Continue Reading

மன்னார் தீவுப் பகுதிக்குள் அடுத்த கட்ட காற்றாலை அமைக்க திட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர்

இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திலே தாழ்வுபாடு மற்றும் சவுத்பார் போன்ற இடங்களிலே இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற 20 மெகாவாட் காற்றாலை திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இன்று இந்த கூட்டத்திலே இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் மற்றும் இத்திட்டத்தினை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்த இருகின்ற வின்ஸ்கேப் பிரைவேட் லிமிடெட் இன் பணிப்பாளர்களும் மற்றும் அவர்களுடன் இணைந்து சமூகவியலாளர்கள் பேராசிரியர்களும் இன்றைய கூட்டத்திலே கலந்து கொண்டார்கள். மேற்கூறப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் […]

Continue Reading

மன். புனித சவேரியார் ஆண்கள் கல்லூர் புதிதாக சூரிய மின்சக்தி திட்டம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு பாடசாலையின் ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி செயற்திட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 17.01.2025 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC அவர்களின் தலைமையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. சமகாலத்தில் அதிகரித்துச் செல்லும் பாடசாலையின் மின்கட்டண செலவீனத்தை குறைக்கும் முகமாக சிறந்த திட்டமாக சூரிய படலம் 25 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது […]

Continue Reading

மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும்

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியருக்கான ஒன்றுகூடலும் மற்றும் நிர்வாகத்தெரிவும் இன்று அதாவது 18.01.2025 சனிக்கிழமை காலை 08.30 தொடக்கம் நண்பகல் 12.45 வரை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குநர் அருட்பணி. மரியதாசன் றொக்சன் குரூஸ் அடிகளாரின் தலைமையில் “அவர் நம்மை அன்பு செய்கிறார்” (Dilexit Nos) என்ற சுற்று மடலின் பிண்ணனியில் “மறைவாழ்வு பணியாளர்களும் யூபிலி ஆண்டும்.” என்னும் தலைப்பில் வளவாளர் அருட்.பணி. றஞ்சன் சேவியர் அடிகளாரசின் சிறப்புரையுடன் நடைபெற்றதோடு இவ் ஒன்றுகூடலில் இவர்களுக்கான புதிய நிர்வாகத் […]

Continue Reading

தலைமன்னார் புனித லோன்றன்சியார் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வு.

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று காலை 06.00 மணிக்கு பொங்கல் திருப்பலி இடம் பெற்றது. இத் திருப்பலியை அமல மரி தியாகிகள் சபையினுடைய குருவானவர் அருட்பணி அமலதாஸ் அடிகளார் தலைமை ஏற்று திருப்பலியே ஒப்புக்கொடுத்தார். இன்றைய தினத்தை சிறப்பிக்க தலைமன்னார் உள்ள ஏழு வலையங்களுக்கும் பொங்கல் பொங்குவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் இடங்களில் ஏழு வலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொங்கல் பொங்கியமையுடன் அழகான கோலங்களையும் போட்டனர். ஏற்கனவே மிகச்சிறந்த கோலத்திற்கான பரிசு வழங்கப்படும் என பங்கு […]

Continue Reading