யாழ். மாகாண அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் கன்னியர்மட விடுதி மாணவர்களை இணைத்து சிறுவர் தினம்
அமைப்பில் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா கற்கைநெறியை மேற்கொள்ளும் திருக்குடும்ப கன்னியர் மட யாழ்மாகாண அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் கன்னியர்மட விடுதி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறுவர்தின நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் நடைபெற்றது. மாகாண தலைவி அருட்சகோதரி தியோபின் குரூஸ் அவர்களின் தலைமையில் இளவாலை திருக்குடும்ப கன்னியர்மடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள், திருப்பலி என்பன இடம்பெற்றன. 16ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன. இளவாலை,யாழ்ப்பாணம்,மன்னார், பண்டிவிரிச்சான், உருத்திரபுரம், நானாட்டான்,வவுனியா,ஹப்புத்தளை […]
Continue Reading
